ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Tuesday 26 June 2012

கலைமகளின் உறைவிடம் அலைமகளின் உதவியைக் கேட்கிறது!

பழம்பெருமை மிக்க சென்னை ஸம்ஸ்க்ருதக் கல்லூரி பாரதத்தின் பாரம்பரியத்தைக் கட்டிக்காப்பதில் முன்நிற்கும் நிறுவனம். கலைமகளின் உறைவிடமான அந்தக் கல்விக்கூடம் அலைமகளின் ஆசியை வேண்டுமெனக் கேட்கும் நிலையில் இருக்கிறது. தமிழகத்தின் பழமையான ஒரு ஸம்ஸ்க்ருத மொழியாராய்ச்சி நிறுவனம் ஸ்ரீ குப்புஸ்வாமி ஸாஸ்த்ரி ஸம்ஸ்க்ருத ஆராய்ச்சி மையம். இது அரசு தரும் நிதியும் பெற்றுச் செயல்பட்டு வந்தது. தற்போது  சிலபல காரணங்களால் அரசு உதவி தடைப்பட்டு நிற்கிறது. அதனால் இந்நிறுவனத்தின் செயல்பாடுகள் மந்தநிலை அடைந்துள்ளன.



ஸம்ஸ்க்ருத மொழியாய்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் இதுவும் ஒன்று. 1944 ஆம் ஆண்டு ஸ்ரீ குப்புஸ்வாமி ஸாஸ்த்ரி என்ற ஸம்ஸ்க்ருத பண்டிதர் நினைவாகத் துவக்கப்பட்ட லாப நோக்கற்ற கல்வி நிறுவனம் இது. இன்று தனியார் நிதி ஆதரவை மட்டுமே நம்பிச் செயல்படும் நிலைக்கு வந்துள்ளது. இதன் பின்னணியில் உள்ள அரசியல் உள்குத்துக்களை ஆராய இது நேரமல்ல.

இம்மையத்தில் கணக்கிலடங்கா ஓலைச் சுவடிகளும், புத்தகங்களும் உள்ளன. அவை ஸம்ஸ்க்ருத மொழியும் இலக்கியமும், வேத, புராண, இதிஹாச,  தர்ம சாஸ்த்ரங்கள் சார்ந்தது மட்டுமல்லாது, கட்டிடக் கலை, இயல் இசை நாடக ஓவியக் கலைகள், புவியியல், வரலாறு, வானவியல் ஆகிய பலதுறைகளைச்  சார்ந்த புத்தகங்கள் உள்ளன. மத்திய திட்டக்குழுவில் இருந்து நிதியுதவி கேட்டுள்ளனர். கக்கூசுக்கு 35 லட்சம் செலவு செய்து மகிழும் உருமாக்கட்டு உத்தமர் மான்டேக் சிங்கர் கல்விப்பணிக்கு எச்சில் கையால் காக்கை ஓட்டவில்லை.

ராஷ்ட்ரிய ஸ்ம்ஸ்க்ருத ஸன்ஸ்தான் அமைப்பிடம் உதவி கோரியுள்ளனர். அரசு எந்திரம் ஆமையைப் பந்தயத்தில் வெற்றி பெற வைக்கவே முனைகிறது. மும்பையிலும் கல்கத்தாவிலும் உள்ள எஷியாடிக் சொசைடிகளுக்கு கோடிக்கணக்கில் கொட்டிக் கொடுத்துள்ளார் திட்டக் கமிஷனின் லட்சக் கக்கூசு லட்சியவாதி. ஆனால் இந்த மையத்துக்கு ஒற்றைப் பைசா தரவில்லை.

இந்த லட்சணத்தில் அரசு நியமித்த குழுவினருக்கும் மையத்தின் நிர்வாகத்தினருக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டு 1995 வரை அரசு கொடுத்து வந்த 10 லட்ச ரூபாய் நிதி நிறுத்தப் பட்டது. போதுமான பொருள் வசதி இல்லாததால் இந்த மையம் தன்னகத்தே ஆராய்ச்சிப் பணி செய்வோருக்கு படி வழங்கக்கூட மடியேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

600 முதல் 1000 ஆண்டுகள் பழமையான பல கையெழுத்து ஓலைச் சுவடிகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது இந்த மையம். இந்தச் சுவடிகளில் பலவும் பழைய க்ரந்த எழுத்துக்களில் உள்ளவை. பீஜ கணிதம் என்று ஸம்ஸ்க்ருதத்தில் வழங்கப்படும் பல்வேறு மாணவர்களுக்கு எட்டிக்காயாக இருந்துவரும் அல்ஜீப்ரா உள்ளிட்ட பல சிக்கலான கணிதக் கோட்பாடுகளை விளக்கும் சுவடிகளும் உள்ளனவாம்.

இந்த மையத்தார் மடியேந்தும் நிலைக்கு ஆளாக்கப்பட்டாலும் சோர்ந்து போய் ஓய்ந்துவிடவில்லை. போராடுவோம் என்று எதிர்நீச்சல் போடுகிறார்கள். கலைமகளின் செல்லப்பிள்ளைகள் அலைமகளின் அபயம் பெற வழியறிந்தவர்கள். இவர்கள் பணம் தாரீர் என்று கேட்டு நிற்கவில்லை. பணத்துக்குப் பதிலாகப் பொக்கிஷங்கள் தருகிறோம் என்று தலை நிமிர்ந்து நிற்கிறார்கள்.

இரண்டாயிரம் ரூபாய் செலுத்துவோர்க்கு பதஞ்சலி மகரிஷி எழுதிய மஹாபஷ்யம் (ஆங்கில மொழிபெயர்ப்புடன் கூடியது) 4 பாகங்கள் கொண்ட புத்தகமும், ஸம்ஸ்க்ருத பீஜகணிதம் பற்றிய ஒரு புத்தகமும் தருகிறார்கள்.  புத்தகங்களை அஞ்சலில் அனுப்பும் செலவுக்கு உள்நாட்டிற்கு ரூபாய் இருநூறு சேர்த்து அனுப்புங்கள். வெளிநாடுகளுக்குப் புத்தகம் அனுப்ப வேண்டுமெனில் ரூபாய்மூவாயிரத்து நூறு அஞ்சல் செலவு சேர்த்து அனுப்புங்கள். (நேரில் புத்தகங்களைப் பெற்றுக் கொண்டால் அஞ்சல் செலவு கிடையாது.)

நிதி மிகுந்தவர் லட்சங்கள் தாரீர். நிதி குறைந்தவர் ஆயிரங்கள் தாரீர். நிதி தர ஏலாதோர் இயன்ற வகையில் ஆதரவு தாரீர். பழமையின் பெருமையைக் காக்கும்  பொன்னான தருணம் இது.

ஸம்ஸ்க்ருதத்தைப் பழுதறக் கற்றுத் தேறவில்லை எனினும் கற்போருக்குக்  கை கொடுப்போம். வதது ஸம்ஸ்க்ருதம்! ஜயது பாரதம்!!

இந்த முகவரிக்கு தொடர்பு கொண்டு மேலும் விவரங்களை அறியலாம்.

Dr. K.S.Balasubramanian , Dy.Director, Kuppuswamy Sastri Research Institute, Sanskrit College, Mylapore, Chennai – 600004.
Phone- 044-24985320
Email: ksrinst@gmail.com

உள்நாட்டுக் கொடையாளர்க்கு வேண்டிய வங்கித் தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன.

Bank particulars for local donors:
Name of the Institute:        THE KUPPUSWAMI SASTRI RESEARCH INSTITUTE.
                                                84, Thiru vi ka Road (Royapettah High Road)
                                                Mylapore
                                                Chennai 600 004.
                                                Phone: 24985320
Contact Person                  Dr.V.Kameswari, Director
Our Bank                              Union Bank of India, Mylapore Branch
A/c type & No.                     S.B.Account No. 395702010007408
IFSC CODE:                         UBIN0539571
MICR NO.                              600026009




வெளிநாட்டுக் கொடையாளர்க்கு வேண்டிய வங்கித் தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன. 

For foreign contributions:
PLEASE REMIT PROCEEDS TO 
Name of the Institute: THE KUPPUSWAMI SASTRI RESEARCH INSTITUTE
Wells Fargo Bank,Newyork,usa 
SWIFT Address : PNBPUS3NNYC
swfit code is:  UBININBBOMD
CHIPS ABA : 0509                 FED ROUTING No. : 026005092
FOR CREDIT TO A/C  2000193008506   OF
UNION BANK OF INDIA, OVERSEAS BRANCH, CHENNAI
Our a/c. No. at the Mylapore branch : 395702010007619
Please instruct the bank at your end accordingly

வந்தே மாதரம் என்போம்..... எங்கள் தொன்மொழித் தாயை வணங்குதும் என்போம்!!

No comments: