ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Thursday, 17 April 2014

கவனமாக எழுதுங்கள் தோழரே!



புலமைபித்தன் தமிழக அரசியலில் எழுதிய (வழமையான) ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு பால.கௌதமன் அவர்களின் தெளிவான பதில்.
_____________________________________________________________________________ 
நடுநிலையாளராக விமர்சிப்பதற்கு நாணயம் தேவை. ஈ.வே.ராவின் தொண்டன் என்பதால் மட்டுமே நீங்கள் நடுநிலையாளராகி விட முடியாது. ஐயா புலமைப்பித்தன் அவர்களே, மோடி அவர்கள் ஆர்.எஸ்.எஸ்ஸின் சித்தாந்தத்தில் உறுதியாக உள்ளவர்  என்றும் தாங்கள் ஈ.வே.ராவின் கொள்கையை ”அணு அளவும் பிசகாமல் ஏற்றுக் கொண்டவர்” என்றும் 16.04.2014 தமிழக அரசியலில் எழுதி உள்ளீர்கள். இதில் தாங்கள் வைக்கும் குற்றச்சாட்டு காந்தியை கொன்றது ஆர்.எஸ்.எஸ் என்பது. காந்தி கொலைக்கும் ஆர்.எஸ்.எஸ்க்கும் உங்களால் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் வீர சாவர்கர்க்கும் எந்த தொடர்பும் இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னும் பொய்யுரைத்து மெய்ப்பிக்கும் கோயாபல்ஸ் தத்துவத்தை நீங்கள் பின்பற்றலாமா? நீங்கள் இம்மியளவும் பிசகாமல் பின்பற்றும் ஈ.வே.ராவின் தத்துவமும் பொய்யின் அடிப்படையிலானது தானோ?

உங்களது கவிதையை நீங்களே மேற்கோள் காட்டி உங்களை நீங்களே தீர்க்கதரிசி என்று கட்டுரையில் வெளிக்காட்டியுள்ளீர்கள் ஏதோ முஸ்லீம்களின் வெறுப்பை அத்வானியும் இந்து அமைப்புகளும், இந்து சமயமும் தூண்டி விட்டதனால் பாரதநாடு தீப்பற்றி எரிவதாக கூறியுள்ளீர்கள். நீங்கள் பிசகாமல் பின்பற்றும் உங்கள் ஆசான் ஈ.வே.ரா மதவாதியா? மனிதநேயவாதியா? இதோ அவரது சொந்த வரிகள்:
பார்ப்பானுக்குப் பயந்து, முஸ்லீம்களுக்கு அதிக இடம் கொடுத்து வந்தோம். அதன் பலனை இன்று அனுபவிக்கிறோம். இது சாணியை மிதிக்க அசிங்கப்பட்டு மலத்தின் மீது காலை வைக்க நேர்ந்த பழமொழியாக முடிந்தது.” - பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள் (பக்கம் 47)
100 க்கும் 6 வீதமுள்ள முஸ்லீம்கள், ஒரு கூலி உடல் உழைப்பு வேலையும் செய்யாமல், அவர்கள் பெண்கள் நம் மனிதர்கள் ’கண்ணுக்கே’ தென்படக்கூடாது என்கின்ற நிலையிலும், பிச்சை எடுப்பவன் வீட்டுப் பெண்கள் உட்பட ’கோஷா முறையில் உழைப்பில்லாமல் வாழும் முறையை இந்த நாட்டில் அனுபவிக்கின்றார்கள். அதே நேரத்தில் நம் ஆண்களும் பெண்களும் அவர்கள் வீட்டு வேலைக்காரர்கள், வேலைக்காரிகளாக இருக்கிறார்கள்”.- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள் (பக்கம் 47)
மைனாரிட்டிகளுக்கு அளிக்கும் சலுகையும் உரிமையும் ’துரோகம்- பச்சை துரோகம் என்கின்ற குழந்தைகளைத்தான் ஈனும்; ஈன்றும் வருகிறது. இது இயற்கையான பண்பு (அல்லது விதி). அதனாலேயே, நம் நாட்டில் உள்ள யோக்கியப் பொறுப்பற்ற மக்கள் தங்கள் சுயநல சமுதாயக் கேடான காரியங்களுக்கு இப்படிப்பட்ட மைனாரிட்டிகளின் பின் பலத்தைப் பயன்படுத்திக் கொண்டு எதையும் செய்யத் துணிகிறார்கள். இந்தத் துரோகி மைனாரிட்டிகளும் அப்படிப்பட்ட பொறுப்பற்ற சமூகத் துரோகிகளுக்கு பயன்பட்டு வாழக் காத்துக்கிடக்கிறார்கள்.” - பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள் (பக்கம் 47)
இவ்வளவு எழுதப்பட்டதின் காரணம், மைனாரிட்டிகளை ஆதிக்கத்தில் விட்டுவைப்பதும், அவர்களது தனிச்சலுகைகளுக்கு இடம் கொடுப்பதும் நாட்டுக்கு - நாட்டு பெருவாரி மக்கள் சமுதாயத்திற்கு கேடு என்பதை விளக்கவேயாகும். - பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள் (பக்கம் 46)
நாட்டு இலட்சணப்படி, எந்த நாட்டிலும் மைனாரிட்டி சமுதாயம், மைனாரிட்டி மதம், மைனாரிட்டி கலாச்சாரம் கொண்ட மக்களுக்கு ஆதிக்கமோ, செல்வாக்கோ இருக்குமானால் அது அந்த நாட்டின் நலத்துக்கு, பொது வளர்ச்சிக்குக் கேடாகவே முடியும். - பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள் (பக்கம் 46)

ஈ.வே.ரா உதிர்த்த இந்த முத்துக்கள் மதச்சார்பின்மையின் கலங்கரை விளக்கமா? அல்லது மத வெறுப்பை தூண்டுவதா என்பதை ஈ.வே.ரா லென்ஸ் கொண்டு பார்க்கும் நீங்கள் உலகத்திற்கு தெரியப்படுத்துவீர்களா?

நடமாடும் மனிதனை விட்டு விட்டு படமாடும் கோயில் கட்ட என்ன தேவை என்று கேள்வியெழுப்பியுள்ளீர்கள். நீங்கள் மேற்கோள் காட்டும் மோடி அவர்களின் தேர்தல் அறிக்கையில் நதீநீர் இணைப்பு, அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி, சுகாதார மேம்பாடு, சாலை வசதிகள் போன்ற எண்ணெற்ற திட்டங்கள் இருப்பது தங்கள் கண்ணுக்கு ஏன் தென்படவில்லை? வெண்மணி கிராமத்தில் தீ விபத்து ஏற்பட்டவுடன் ஏழைகளின் குரல் உங்கள் ஆசான் ஈ.வே.ராவின் காதில் விழவில்லை. ஆனால், பரச்சியும் பள்ளச்சியும் நைலான் ஜாக்கெட் அணிந்திருந்தார்கள் என்பது மட்டும்தான் ஈ.வே.ராவிற்குத் தெரிந்திருந்தது. இந்த பார்வை தங்கள் சித்தாந்ததிற்கு உண்டானது போலும்.!

சோமநாதபுரத்தில் ஆக்கிரமிப்பாளனின் மசூதியை அகற்றிவிட்டு ஆலயம் கட்டினார் சர்தார் படேல். சர்தார் படேல் குஜராத்தி அவர் அப்படித்தான் என்று புலம்பல் கவிதை எழுதுவார் நம் புலவர். குஜராத்தி உணவு   என்று எழுதிய பெயர் பலகையை கருப்புச்சாயம் கொண்டு பூசாமல் இருந்தால் சரி. மோடி குஜராத்தில் பிறந்ததால் குஜராத் என்ற பெயரே கெட்ட வார்த்தையாகிவிட்டது. அதனால் சர்தார் படேலை தள்ளிவிடுவோம். தலைச்சிறந்த காந்தியவாதியான பாரதத்தின் முதல் ஜனாதிபதி திரு. இராஜேந்திர பிரசாத் அவர்கள் சோமநாதபுரத்திலிருந்த மசூதியை அப்புறபடுத்திவிட்டு எழுப்பிய அடிக்கல் நாட்டு விழாவின் போது ”அழிவின் ஆற்றலைவிட புனர்நிர்மாணத்தின் ஆற்றல் வலிமையானது என்பதையே இந்த ஆலய புனர் நிர்மாணம் காட்டுகிறது” என்றார். அத்துடன் நிறுத்திவிடவில்லை இந்த ”ஆலயத்தின் புனர்நிர்மாணம் இந்தியா மீண்டும் செழிப்பாக அமைவதற்கான அஸ்திவாரம். ஏனென்றால் சோமநாதபுர ஆலயம் செழிப்பின் அடையாளம்” என்றார்.

ஆக்கிரமிப்பாளனின் மசூதியை அகற்றி பல மைல்களுக்கு அப்பால் கட்டி ஆலயம் எழுப்பியதால் கலவரம் ஏற்பட்டதா? இராஜேந்திர பிரசாத்தும் காங்கிரஸ் கட்சியும் மததீவரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டனரா? இது போல் தானே இராமனின் ஆலயமும்.

1992க்குப் பின் தான் மதக்கலவரம் ஏற்பட்டது என்ற கருத்தை பதிவிட்ட நீங்கள் 1963ல் நடந்த ஹஸ்ரத்பல் கலவரம், 1961ல் நடந்த உஷா பார்கவா கற்பழிப்பு கலவரம், ரம்ஜான் கலவரங்கள், ஜெகன்நாத் ரதயாத்திரை கலவரங்கள், சத்ரபதி சிவாஜி ஊர்வல கலவரங்கள், விநாயகர் சதுர்த்தி கலவரம், உருது மொழி போராட்ட கலவரம், அலிகார் முஸ்லீம் பல்கலைகழக கலவரம், போன்றவற்றை படிக்கவில்லையா? அல்லது படித்து மறந்தீர்களா? அல்லது படித்ததை மறைத்தீர்களா?

இந்தியா ஒரு தேசமே இல்லை என்று கூக்குரலிடும் நீங்கள் இமயம் முதல் குமரிவரை என்று பன்னெடுங்காலமாக ஓதி வந்த சமய நூல்களை படித்திருப்பதற்கு வாய்ப்பில்லை ஆனால் இதை குறிப்பிட்டுள்ள தமிழ் இலக்கியங்களையாவது படித்திருப்பீர்கள் என்று நினைத்தேன். ஆனால் நீங்கள் அதிலும் எதையும் படிக்கவில்லை என்பதை அறிந்து தமிழ் ”காட்டுமிராண்டி மொழி” என்று சொன்ன ஈ.வே.ராவின் உண்மையான வழித்தோன்றல் தாங்கள் தான் என்பதை ஒத்துக்கொள்கிறேன்.

தமிழகம் நீங்கலாக” தான் இந்துராஷ்ட்டிரம் அமையும் என்று ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் முகவரியாக தங்களை கற்பனை செய்து கொண்டு  குரல் கொடுக்கும் நீங்கள் தமிழுக்கோ, தமிழ் மக்களுக்கோ இவைகளின் வளர்ச்சிக்கோ என்ன செய்துள்ளீர்கள்? திருக்குறளையும், சங்க இலக்கியங்களையும், சமய இலக்கியங்களையும் கொச்சைப்படுத்துவதுடன் தமிழனை காட்டுமிராண்டி, முட்டாள் என்ற சான்றிதழ்களை மட்டும் தானே கொடுத்தீர்கள். கடவுள் இல்லை என்ற ஈ.வே.ராவின் தத்துவம் ”ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்று அண்ணாவால் மாற்றி அமைக்கப்பட்டது. ஏழையின் சிரிப்பில் இறைவன் இருக்கிறான்” என்று எம்.ஜி.ஆரால் உருமாறியது. இந்துமதத்தை தவிர அனைத்து தெய்வங்களும் உண்மை” என்று கருணாநிதியால் சமைக்கப்பட்டது. இப்போது நானே தெய்வம்” என்று ஜெயலலிதாவால் உன்னதநிலை பெற்றது.
இப்படி தமிழ்நாட்டிலே ஒண்ட இடம் இல்லாத நீங்கள் எப்படி விசா கொடுக்கும் அதிகாரியாக மாறினீர்கள்?

எப்படி இருந்தாலும் உங்கள் பிரச்சாரத்திற்கு என் வாழ்த்துக்கள்.

தோழமையுடன்,

பால. கௌதமன்.

No comments: