இக்கட்டுரை வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம் கள ஆய்வு செய்து வெளியிட்டது.
இராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டையில் அமைந்துள்ள அரசு உதவி பெரும் முஸ்லீம் தனியார் பள்ளியான முகமதியா மேல் நிலைப்பள்ளியில் தாயத்து மற்றும் செந்தூரம் அணிந்து வந்த மாணவர்கள் அஜீஸ் என்ற உடற்பயிற்சி ஆசிரியரால் (PT Master) தடுத்து நிறுத்தப்பட்டனர். அந்த மாணவர்கள் கழுத்திலும் கையிலும் இருந்த ரட்சை கயிறுகள், தாயத்துகள் மற்றும் டாலர்கள் அறுக்கப்பட்டன. நெற்றியில் அணிந்திருந்த செந்தூரம் அழிக்கப்பட்டது. இந்தக் கொடுமையைக் கேள்விப்பட்ட பெற்றோர்கள் பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெரினா லோட்டஸ் அவர்களிடம் சென்று முறையிட்டனர்.
தலைமை ஆசிரியையோ மாவட்ட ஆட்சித் தலைவரின் அறிவுறுத்தலின்படியே இதைச் செய்கிறோம் என்று கூறியதாக சொல்கிறார் ரமேஷ் (பெயர் மாற்றப் பட்டுள்ளது) என்ற மாணவரின் தந்தை. இதனால் கொதிப்படைந்த பெற்றோர்கள் , இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் திரு. பிராபகரன் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. நந்தகுமார் அவர்களை சந்தித்து இச் சம்பவம் குறித்து முறையிட்டனர். அதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. நந்தகுமார் அவர்கள், தனது நடவடிக்கையை நியாயப்படுத்தியதோடு, வேண்டுமென்றால் நீதிமன்றத்தில் சென்று பார்த்துக்கொள்ளுங்கள் என்றும் சொன்னதாக இந்து மக்கள் கட்சியின் பொறுப்பாளர் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக 21/01/2014 செவ்வாய் கிழமை மாலை இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை ஜெரினா லோட்டஸ் அவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டோம். இந்த உரையாடலில் ஜெரினா லோட்டஸ் அவர்கள் மாவட்ட ஆட்சியரின் ஆணைப்படித்தான் நடந்து கொண்டேன் என்று தெரிவித்தார். மேலும், அவர் கூறுகையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தொடர்பான தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் கயிறு கட்டுவது, பொட்டு வைப்பது, மதங்களை குறிக்கும் வகையில் உள்ள விஷயங்கள் வேண்டாம் என்று மாணவர்களை அறிவுறுத்துங்கள் என்று மாவட்ட ஆட்சியர் சொன்னதாக சொன்னார். இதற்கு மாவட்ட ஆட்சியர் திரு. நந்தகுமார் அவர்கள் சொன்ன காரணம் என்ன தெரியுமா?
//பள்ளி வளாகங்களில் மதச்சின்னங்கள் அணிந்து கொண்டு மாணவர்கள் வருவதால் சண்டை ஏற்படுகிறது, இதனால் பல மாணவர்கள் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பட்டுள்ளனர். இந்த சண்டைக்கு காரணம் மதச்சின்னங்கள் தான் என்று மப்டியில் கண்காணிக்கும் போலீசார் தெரிவித்ததாகவும், மேலும் எந்தெந்த பள்ளியில் இத்தகைய சம்பவங்கள் நடந்துள்ளது என்றும் பட்டியலிட்டார்.// என்றார் ஜெரினா லோட்டஸ் அவர்கள்.
இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. நந்தகுமார் அவர்களுக்கு புதன்கிழமை (22/01/2014) அன்று இ-மெயில் அனுப்பப்பட்டது. இதுவரை பதில் இல்லை. ஆட்சியரின் உதவியாளர் திரு தருமன் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது நான் பிசியாக உள்ளேன் பின்னர் தொடர்பு கொள்ளுங்கள் என்று சொல்லி இணைப்பைத் துண்டித்துவிட்டார். அவரை தொடர்புகொள்ள மீண்டும் முயற்சித்த போது அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை.
இந்த மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கை சில கேள்விகளை எழுப்புகிறது.
மதச்சின்னங்கள் அணியும் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லையென்றால் இராமநாதபுரம் ஆப்கானிஸ்தானாக மாறிவிட்டதா?
மதச்சின்னங்கள் என்றால் குல்லாவும், பர்தாவும் அடங்குமே! இவைகளை நீக்க மாவட்ட ஆட்சியர் ஏன் ஆலோசனை வழங்கவில்லை?
மதச்சின்னங்களை அணிந்துகொள்வது அடிப்படை உரிமை. இந்த உரிமையை பறிக்கும் உரிமத்தை மாவட்ட ஆட்சியருக்கு யார் கொடுத்தார்கள்?
எந்தெந்தப் பள்ளிகளில் மதச்சின்னங்களை மையமாகக் கொண்டு சச்சரவுகள் ஏற்பட்டன? இதைத் தூண்டியவர்கள் யார்? சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்ட மாணவர்கள் யார்?
இந்தச் சூழ்நிலை நிலவும் பள்ளிகளில் அதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? இதில் தொடர்புடைய ஆசிரியர்கள் எவரேனும் உள்ளனரா?
இவ்வளவு மோசமான நிலை இராமநாதபுரம் மாவட்டத்தில் நிலவுகிறது என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கும் திரு. நந்தகுமார் அவர்கள், மத பயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்கள் மற்றும் தூண்டுபவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்?
இராமநாதபுரம் மாவட்டத்தில் இந்துக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கமுடியாது என்பதை ஒத்துக்கொள்கிறாரா?
கலவரங்கள் ஏற்படாமலிருக்க இந்துப் பெண்களை தாலி அறுக்க திரு. நந்தகுமார் அவர்கள் உத்திரவிடுவாரா?
தண்ணீர் பஞ்சம் நிலவும் இராமநாதபுரம் மாவட்டத்தில் நெற்றியில் இருக்கும் திலகங்களை அழிக்க கர்நாடகத்தில் இருந்து காவிரி நீர் கொண்டுவர சிறப்புக் கோரிக்கை விடுவாரோ!
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற அடிப்படைவாத ஆட்சி நிலவும் பகுதிகளில் தாலிபான்கள் விதிக்கும் சட்டதிட்டத்தை இராமநாதபுரத்தில் நடைமுறைப்படுத்தும் அளவிற்கு இஸ்லாமிய பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளது, இந்த பயங்கரவாதத்தைத் தடுக்கும் பொறுப்பில் இருக்க வேண்டிய அரசு இந்த ஜிகாதி கோரிக்கைகளை நிறைவேற்றுகிறது.
அம்மன் கோவில்களில் மேளம் அடிக்கத் தடை
பாரம்பரிய கோவில் ஊர்வலப் பாதைகளை மாற்றுதல்
அழகன் குளம் என்ற கிராமத்தில் கோவில் அருகாமையில் பசு மாட்டை வெட்டிய முஸ்லீம்களின் மீது புகார் கொடுத்த இந்துக்கள் மீது வழக்கு
சுவாமி விவேகானந்தரின் நினைவுத்தூணை உடைத்தவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
புதுமடம் கிராமத்தில் செருப்புடன் தேசிய கொடியை ஏற்றியவர்கள் தண்டிக்கப்படவில்லை.
முஸ்லீம் அல்லாதவர்கள் ஊருக்குள் நுழைய தடை விதித்தும், பொது சாலைகளில் வாகனங்களில் பாட்டு போடுவதைக் கூட அனுமதிக்க மாட்டோம் என்று எச்சரித்து பலகை வைப்பதையும் தடுப்பதில்லை.
பெரியபட்டணத்தில் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்ட உள்ளூர் மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த அடிப்படைவாத முஸ்லீம்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த சம்பவங்களின் பின்ணனியில் அரசின் உதவி பெற்று இயங்கி வரும் சித்தார்கோட்டை முகமதியா மேல்நிலைப் பள்ளியில் பயிலும் இந்து மாணவர்கள் அணிந்த தாயத்து/ இரட்சை கயிறு மற்றும் சாமி டாலர்களை அறுத்தல், செந்தூரங்களை அழித்தல் போன்றவை இராமநாதபுரம் ஒரு குட்டி காஷ்மீராக மாறிக் கொண்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது. இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் பிரிவினைவாதத்தை தடுக்க வேண்டிய மாவட்ட ஆட்சியர் பிரிவினைவாத சக்திகளுக்குத் துணைபோவதே!
இராமநாதபுரத்தை பிரிவினைவாத, பயங்கரவாத நாசகார சக்திகளிடமிருந்து காப்பாற்ற மத்திய மாநில அரசுகள் விழித்துக்கொண்டு முனைப்புடன் செயல்படவேண்டும். உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் இராமநாதபுரத்தில் இந்துக்களுக்கு நடக்கும் அநீதிக்கு எதிராக குரல் எழுப்பவேண்டும்.
இராமநாதபுரத்தை காக்க வீரத்துறவி.ஐயா. இராம.கோபாலன் அவர்களின் அறைகூவல் இதோ....
அரசியல், பொருளாதாரம், நிர்வாகம், சர்வதேச உறவுகள், நாட்டு நடப்பு, குறித்த என் எண்ணங்களையும், என் அனுபவங்களையும் இங்கே பதிவேன்!
Disclaimer
நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.
இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.
அன்புடன் என்றும்,
அருண்அம்பி. (@arunambie)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment