இந்து வேதாந்தமும், இந்து தத்துவங்களும் அறிந்த வடிவேலு செட்டியார் என்ற பெரியவர் ஒவ்வொரு குறளும் இந்து தத்துவங்களிளிருந்துதான் எடுத்தாளப்பட்டிருக்கிறது என்பதை ஆதாரங்களுடன் எழுதி இருக்கிறார்.
இந்த தீரா ..விட அரசாங்கங்கள் வடிவேலு செட்டியாரின் புத்தகங்களை கிடைக்காமல் செய்துவிட்டனர். இப்போது மிகவும் பாழடைந்த நிலையில் தஞ்சையில் உள்ள ஒரு முது பெரும் தமிழ் அறிஞரிடம் ஒரே ஒரு புத்தகம் தான் உள்ளது. பக்கத்தைப் புரட்டினால் அது தூள் தூளாகும் நிலையில் உள்ளது. அதனை மீட்டு மறுபதிப்பு செய்ய முயன்றால் அதனை கொடுத்து உதவுவதாக அந்த பெரியவர் கூறியிருக்கிறார்.."வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம்" அதனை ஒரு தவமாக ஏற்று செய்து முடிக்க உறுதி பூண்டுள்ளது.
இந்தியத் தத்துவத்தைப் பற்றிய நூல்கள் எழுதியுள்ள அறிஞர்கள் அனைவரும் தவறாது குறிப்பிடுகின்ற நூல் "சர்வதரிசன சங்கிரகம்", இந்திய தத்துவ தரிசனங்களைப் பதினாறு தலைப்புகளில் பகுத்து விளக்கியுள்ள இந்த வடமொழி நூலை இராமச்சந்திர சாஸ்திரியார் என்பவரைக் கொண்டு மொழிபெயர்த்து நல்ல முன்னுரையுடனும் குறிப்பிடத்தக்க குறிப்புகளுடனும் 1910 இல் வெளியிட்டார் வடிவேலு செட்டியார். வேதத்துக்கு உரை வகுத்த சாயனருடன் பிறந்த ”வித்யாரண்யர்” இந்நூலின் ஆசிரியர் ஆவார்.
இதேபோன்று திருக்குறள் பரிமேலழகர் உரையிலுள்ள இலக்கண நுட்பங்களையும் தத்துவக் குறிப்புகளையும் தெளிவாக விளக்கி இவரால் எழுதப்பட்ட குறிப்புகள் தமிழை ஆய்ந்தறிந்த அறிஞர்களால் பாராட்டப்படுகின்றன. இந்தத் திருக்குறள் நூலில் எல்லா குறட்பாக்களுக்கும் ஆங்கில மொழிபெயர்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. செட்டியாரின் நண்பர் ஒருவர் இந்த மொழிபெயர்ப்பைச் செய்துகொடுத்து தன் பெயரை வெளியிட வேண்டாம் என்று சொன்னதாகச் செட்டியார் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அந்த மொழிபெயர்ப்புப் பகுதிகளில் பெரும்பாலானவை துரு பாதிரியாருடைய மொழிபெயர்ப்பு ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
வரலாறு
இராமானுஜ நாயக்கர் என்ற ஓய்வு பெற்ற ஆசிரியர் அவரது கடைக்கு அடிக்கடி வருவார். தமிழில் பெரும் புலவரான அவர், கடைக்கு வரும்போதெல்லாம் தமிழ்மொழியின் சுவை மிகுந்த பாடல்களைச் செட்டியாரிடம் சொல்லி மகிழ்ந்து வந்தார். அப்பாடல்களைக் கேட்டுச் சுவைத்து வந்த செட்டியாருக்கு தமிழ் இலக்கியங்களின் மீது பெரும் பற்று ஏற்பட்டது. இராமானுஜ நாயக்கர் வரும் வேளைகளில் இலக்கணம், இலக்கியம், புராணங்கள் என்று அன்றைய நிலையில் புகழ் பெற்றிருந்த எல்லா வகையான நூல்களும் நாயக்கரின் சொற்பொழிவில் வந்து வடிவேலு செட்டியாரின் அறிவை நிறைத்தன. இந்தக் கல்வியை செட்டியார் ஏழு ஆண்டுகள் பெற்றார்.
தமிழ்க் கல்வியின் மீதான விருப்பம் என்பது, செட்டியாரிடத்தில் வணிகத்தின் மீதான விருப்பத்தைக் குறைக்கத் தொடங்கியது. இதன் விளைவாக, குடும்ப உறுப்பினர்கள் அவரைக் கண்டித்தும் தடைகள் பல உண்டு பண்ணியும், அவர் உள்ளத்தை வியாபாரத் துறையில் இழுத்து நிறுத்த பல முயற்சிகள் செய்து தோல்வி அடைந்தனர்.
அப்போது இராமானந்த யோகிகள் என்னும் மகாவித்துவான் இராமசாமி நாயுடு, சுப்பன் செட்டியார், மயிலை சண்முகம் பிள்ளை போன்றவர்களிடம் தொடர்பு கொண்டு தமிழ் இலக்கண, இலக்கியங்களில் தமக்கு ஏற்பட்ட ஐயங்களைப் பெருமளவில் நீக்கிக்கொண்டார். இதுவும் வியாபாரத்தைப் பாதித்ததால் குடும்பத்தினரிடையே கசப்பை ஏற்படுத்தியது. இவர் கொள்முதலுக்குச் செல்லும்போது சிவப்பு நிற வேட்டியுடன் தான் செல்வார். உறவினர்களும் இவர் வியாபார வேலையாகச் செல்கிறார் என்று திருப்தி கொள்வர். ஆனால் கொள்முதலுக்கு எடுத்துச் செல்லும் சாக்குப்பையில் வெள்ளை வேட்டியையும் தேவையான புத்தகங்களையும் மறைத்து எடுத்துச் செல்வார். கூவம் ஆற்றைக் கடந்தவுடன் வெள்ளை வேட்டியை உடுத்திக்கொண்டு, மேற்கூறப்பட்ட பெரும் புலவர்களிடம் பாடம் கேட்கச் சென்றுவிடுவார். பின்னர் சரக்கைக் கொள்முதல் செய்துகொண்டு கடைக்குத் திரும்புவார்.
தமிழ் மீது மாறாப் பற்றுக்கொண்டிருந்த வடிவேலு செட்டியாருக்கு உறவுகளும், வியாபாரமும் தீராத துன்பத்தைத் தந்தன. இந்த நேரத்தில் ரிப்பன் அச்சக உரிமையாளராகவும் வேதாந்த சாத்திரத்தில் பெரும் புலவராகவும் விளங்கிய சை.இரத்தினச் செட்டியாரின் தொடர்பு வடிவேலு செட்டியாருக்குக் கிடைத்தது. இவருக்கு வேதாந்தம் பயிற்றுவிப்பதில் குருவாக விளங்கிய அவர், குடும்பச் சூழ்நிலையால் செட்டியாருடைய கல்விக்கு இடையூறு ஏற்படுவதை அறிந்து 1896 இல் தங்கசாலைத் தெருவில் தொடங்கப்பட்ட இந்து தியாலஜிகல் உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியர் பதவியை இவருக்கு வாங்கித் தந்தார். அப்போது இவருக்கு வயது 33. இந்த நிகழ்ச்சி வடிவேலு செட்டியாரின் வாழ்க்கைப் பாதையை முற்றிலும் மாற்றி அமைத்துவிட்டது.
பள்ளியில் மாணவர்களுக்குப் பாடம் நடத்துவதுடன் மற்ற நேரங்களில் தன்னை நாடி வருகின்ற தமிழ் ஆர்வலர்களுக்குத் தமிழும், தத்துவமும் போதித்து வந்தார். அத்தகையவர்களுள், தெ. பொ. மீனாட்சிசுந்தரனார், மொ. அ. துரை அரங்கனார், மு. வரதராசனார் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
வடிவேலு செட்டியார், நாற்பத்தைந்து நூல்களுக்கும் மேல் எழுதியுள்ளார். அதில்,
திருக்குறள் பரிமேலழகர் உரைக்கான விளக்கம்
கைவல்ய நவநீதம் மூலம் - மூலத்துக்கு இயைந்த வசன வினா - விடை, மேற்கோளுடன் விரிவுரை
பகவத்கீதை - மூலத்துக்கு இயைந்த வசனமும் விருத்தியுரையும்
சர்வ தரிசன சங்கிரகம்
ஆகியன குறிப்பிடத்தக்கவை.
திருவள்ளுவர் தினம்
திருவள்ளுவருக்கு மரியாதை செய்யு முகத்தான் அவரது ஜென்ம நட்சத்திர நாளாம் வைகாசி அனுஷ நட்சத்திரத்தில் இனி ஒவ்வொரு ஆண்டும் வள்ளுவர் தினம் கொண்டாட முடிவு செய்யபட்டுள்ளது. அதன் படி வரும் ஆண்டு வைகாசி திங்கள் அனுஷ நட்சத்திர நாள் அன்று அவருக்கு மெய்யான கௌரவத்தை செலுத்தும் வகையில் 100 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் வாழ்ந்த வடிவேலு செட்டியார் அவர்கள் எழுதிய திருக்குறள் பரிமேலழாகர் உரைக்கான விளக்க உரை நூலை மறு பதிப்பித்து மரியாதை செய்ய இருக்கிறோம்.
விவரங்களுக்கு வேத விஞ்ஞான ஆராய்ச்சி மைய இணைய தளத்தைத் தொடர்பு கொள்ளவும். அலை பேசி எண்: +91 95664 11133. மின்னஞ்சல்: info@vsrc.in
வந்தே மாதரம்.
2 comments:
கோ. வடிவேலு செட்டியார் அவர்களின் சில நூல்கள் Digital Library of India (http://www.new1.dli.ernet.in/ அல்லது http://dli.gov.in/) என்னும் இணைய தளத்தில் காணக் கிடைக்கின்றன.
The re-print of Ko. Vadivelu Chettiyaar's Thirukkural monumental commentary is published again. Please check these links.
www.thehindu.com/news/cities/chennai/from-merchant-to-tirukkural-scholar/article7775746.ece
books.dinamalar.com/details.asp?id=23955
The 2-volume book can be purchased upon request with the publisher. A detailed review of the reprint was published in Dinamalar Chennai edition about a month ago (if I remember right, it is Jul 24, 2016).
Hope this helps.
Post a Comment