ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Monday 10 December 2012

நியூ திக கம்பெனி நடத்தும் (இயர் எண்டிங் ஸ்டாக் க்ளியரன்ஸ்) இனமான வியாபாரம்

கடைகளில் வேலை செய்பவர்களில் சிலர் தொழில் கற்றுக் கொண்டு சில காலம் கழித்து எதிர்க்கடை போடுவர். அதற்கு புதிதாகப் பெயர் வைப்பர், அல்லது நியூ என்று சேர்த்து ப்ரபலமான கடைப் பெயர்களை வைப்பர். உதாரணம் உட்லண்ட்ஸ் - நியூ உட்லண்ட்ஸ், சரவணபவன்  - நியூ சரவணபவன் போன்றவை. பிறகு நடக்கும் போட்டி யார் சிறந்த வியாபாரி என்பதைத் தீர்மானிக்கும்.


அதே போல ஈவெ ராமசாமி நாயக்கர் ஆரம்பித்த திராவிடர் கழகம் பிறகு கைமாறி வீரமணி அன் சன்ஸ் ப்ரைவேட் லிமிடெட் என்று புரிந்து கொள்ளும் வகையில் நடத்தப்படுகிறது. கம்பெனியில் பெரிய பொறுப்புக்கு வரலாம் என்று கணக்குப் போட்டிருந்த சிலர் முடியாது என்றதும் போட்டிக் கம்பெனி நடத்துகின்றனர்.அப்படி திகவில் இருந்து விலகிய இராமகிருஷ்ணன் என்பவர் ஆரம்பித்த கம்பெனி பெரியார் திக. இந்தக் கம்பெனி புதுவையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராமர் பெயருக்கும் இந்த வகையறா கட்சிகளுக்கும் என்ன அப்படி ஒரு பிணைப்பு என்று தெரியவில்லை. தலைமை ஏற்போர் ராமர் பெயர் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். கலிகால விநோதம் என்று எடுத்துக் கொண்டு விஷயத்துக்கு வருவோம்.

வருகிற டிசம்பர் 24ஆம் தேதி ஸ்ரீரங்கம் ப்ராமணாள் கஃபேயை எதிர்த்து ’வீரம்’ காட்டிய இந்த நியூ திக கம்பெனியார் திருமயிலை (மைலாப்பூர்) கபாலீஸ்வரர் கோவிலில் கருவறை நுழைவுப் போராட்டம் என்ற பெயரில் ஒரு இனமான வியாபார உத்தியைக் கையாண்டு தங்களது சந்தை மதிப்பை உயர்த்திக்  கொள்ளத் திட்டமிட்டுள்ளனர்.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மறைந்த தினம், கிறிஸ்துமஸ் விழாக்காலம், அரசும் காவல்துறையும் தங்கள் முழுக்கவனத்தையும் அங்கே செலுத்துவர், அதனால்  கபாலிஸ்வரர் கோவிலில் எதுவும் நடத்த ஏதுவான சூழல் இருக்கும்.  இந்துக்கள் ஏதுவும் செய்துவிட மாட்டார்கள் என்ற தவறான தெனாவட்டின் அடிப்படையில் திட்டமிடப்பட்ட செயல்பாடு இது.
அவர்கள் வெளியிட்டுள்ள படத்திலேயே கோவிலுக்குள் இவர்கள் நுழைவது போலவும், வயதான இரு அந்தணர்கள் கவலையோடு பார்ப்பது போலவும் படம் போட்டுள்ளனர். இந்து அமைப்புகள் அங்கே கூடும் என்பதை அவர்கள் எதிர்பார்க்கவில்லையா அல்லது திராவிட மாயையில் கட்டுண்டு இந்துக்களாவது ஒன்றுபட்டு எதிர்ப்பதாவது என்று மிதக்கிறார்களா என்று தெரியவில்லை.

கி.வீரமணி தன் கம்பெனி சார்பாகச் சாதி ஒழிப்பு வியாபாரம் நடத்த தருமபுரி வட்டாரத்தில் முகாமிட்டுள்ளார். அது தவிர கிறிஸ்துமஸ் சமயத்தில் கூட்டணி முடிவாகும் என்று பெரிய முதலாளி கருணாநிதி சொல்லியிருப்பதால் அது குறித்து பகுத்தறிவு அறிக்கை வாசிக்கும் கடமையும் அவருக்கு இருக்கிறது. இந்தப் போராட்டம் அவர் வரையில் பெரிதல்ல.


மார்கழித் திங்கள் பத்தாம் நாள் (24/12/2012) இந்தப் நியூ திராவிடர் கழகக் கம்பெனியார் திரு மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் நுழையத் திட்டமிட்டுள்ளனர். பரமன் பால் பற்றுக் கொண்ட பெருமக்கள் திரண்டுவந்து இவர்களை முறியடித்துத் திருப்பி அனுப்ப வேண்டும். இந்நிகழ்வு இந்து மதத்தை மட்டுமே எதிர்த்துவரும் திராவிடக் கம்பெனி வெறுப்பு வியாபாரரிகளுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்.  

தேசத்தின் பெருமை காக்க உழைத்த உத்தமர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு நம்மால் இயன்ற பிறந்ததினப் பரிசாக தேச முன்னேற்றத்துக்கும் சமுதாய ஒற்றுமைக்கும் ஊறு விளைவிக்கும் இத்தகைய கும்பல்களை நம் சமுதாயத்தைச் சீர்குலைப்பதில் இருந்து தடுத்து நிறுத்துவோம்.

வந்தே மாதரம்!  வந்தே மாதரம்!!  வந்தே மாதரம்!!!

சிவோஹம்... சிவோஹம்... சிவோஹம்.

1 comment:

Anonymous said...

பயந்தாகொள்ளி பசங்கள். சோ கிட்ட மட்டும் வீரத்தை காட்டும் சோதா பசங்கள்.