மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை முக்திபேறு பெற்றவர் என அறிவிக்கும் பெருவிழா நாகர்கோவிலில் கார்த்திகை மாதம் 17ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (02/12/12) நடைபெற்றது. இது ஜெயா தொலைக்காட்சியின் கூட்டற்குறி அலைவரிசையில் (Jaya Plus Channel) நேரலை காட்டப்பட்டது. அப்போது பிள்ளைவாள் என்ன தவம் செய்து முக்தி பெற்றார் என்று தேடிப் பார்ப்போம் என்று இணையத்தில் இணைந்த போது குழப்பமே மிஞ்சியது.
பிள்ளைவாள் ஒருவர் நாயர் குடும்பத்தில் நீலகண்டன் என்று பிறந்து, வளர்ந்த பின் கிறிஸ்தவம் தழுவி தேவசகாயம் பிள்ளை என்றாகி, சாதிகளை மறுத்ததால் உயர்சாதிச் சதிகாரகளின் ஆலோசனையின் பேரில் மன்னர் ஆணையால் கொல்லப்பட்டு அவ்வுயிர்த் தியாகத்தால் 250 ஆண்டுகள் கழித்து இப்போது முக்தி பெறுகிறார் என்று சொல்லப்படுகிறது
பிள்ளைவாள் ஒருவர் நாயர் குடும்பத்தில் நீலகண்டன் என்று பிறந்து, வளர்ந்த பின் கிறிஸ்தவம் தழுவி தேவசகாயம் பிள்ளை என்றாகி, சாதிகளை மறுத்ததால் உயர்சாதிச் சதிகாரகளின் ஆலோசனையின் பேரில் மன்னர் ஆணையால் கொல்லப்பட்டு அவ்வுயிர்த் தியாகத்தால் 250 ஆண்டுகள் கழித்து இப்போது முக்தி பெறுகிறார் என்று சொல்லப்படுகிறது
முக்தி என்பது குறித்த ஓரளவே தெளிவிருந்தாலும் இங்கே ஏதோ உதைக்கிறது என்று மனதில் பட்டது. குழப்பம் நீங்கி மனம் தெளிவுற சற்றே விலகி ஒரு குளம்பியம் அருந்தினேன். அப்போது யோசித்ததில் வந்த கேள்வி...
முக்தி எனப்படுவது யாதெனில் ஊர்கூடிப்
பட்ட மளித்து விடல்
பட்ட மளித்து விடல்
என்பது போல அவ்வளவு எளிதானதா முக்தி?
ஒருவரைப் பற்றி 250 ஆண்டுகள் சில மக்கள் நினைத்துப் போற்றுவதே முக்திக்கு வழி என்ற கணக்கில் பார்த்தால் நம் பாட்டன் முப்பாட்டன், பாட்டி முப்பாட்டிகள் முக்தி அடைந்து புனிதம் பெற்று உய்ந்துவிட்டார்கள். நம்மில் பலர் மூன்று தலைமுறைக்கு மேலேயே முன்னோரை நினைவு கொள்கிறோமே? ஆக, நாம் எல்லோருமே புனிதர் பரம்பரை. இதல்லவா அற்புதம்! இதுதானே மனித வாழ்வின் கடைத்தேற்றம்!!
உயிர் போனபின் 250 ஆண்டுகள் காத்திருந்து ஒருவர் முக்தி அடைகிறார் என்றால் அவரது ஆத்மா இத்தனை ஆண்டுகள் என்ன செய்து கொண்டிருந்தது? அதற்குப் பதில் வராது, ஏனெனில் மருள் நீக்கி அருள் பெருக்கும் விஷயங்களில் கிறிஸ்தவம் அடிப்படையிலேயே சத்தற்றது என்பது விவரமறிந்தோர் கணிப்பு. அத்தகைய தெளிவுசார் கணிப்புகளை வன்முறை கொண்டு அடக்குவதே இவர்களது வழக்கமாகவும் இருந்து வருகிறது.
இதில் தெளிவு தரும் தரவுகளும், மறுக்கவியலா ஆதாரங்களும் தந்து இப்புனிதப் புதிரைப் புரிந்து கொள்ள உதவுகிறார் நண்பர் பால. கௌதமன்.
வரலாற்றாசிரியர்கள் இல்லையென மறுக்கும் ஒரு செய்தி இங்கே கிறிஸ்தவ தேவாலயத்தால் மெய் போலும்மே என்று பரப்பப்படுகிறது. மதத்தின் தலைவர் அங்கீகாரம் வேறு தந்துள்ளாராம். உற்று நோக்கினால் போப்பாண்டவர் இது போன்ற பல பிரித்தாட்கொளும் சூழ்ச்சிகளுக்கு ஆசியும் அங்கீகாரமும் தந்துள்ளார்.
”புனித தாமஸ்” போன்ற புனைவுதான் தேவசகாயம் வரலாறும்.
உண்மையில் சொல்லப்போனால் ஏசு என்று ஒருவர் இருந்ததற்கே இவர்களிடம் ஆதாரம்
கிடையாது. அதனால் தான் தற்போதய போப் திரு பெனெடிக்ட், “ஏசுநாதர், நாம்
நினைத்ததை விட சுமார் 200 முதல் 500 ஆண்டுகளுக்கு முன் பிறந்திருக்கலாம்”
என்கிறார். அப்படியென்றால், ஏசு பிறப்பை சுமார் 2050 ஆண்டு என்ற
அடிப்படையில் சர்ச்சால் நிரூபிக்கப்பட்ட சாகசங்கள் புளுகுமூட்டைகள்! ஆக,
இவர்களுடைய மொத்த சரித்திரமே புனைவுதான்.
கோவா இன்க்விஸிஷன் (அதிகாரப் பூர்வ அழைப்பு, அதீத அபராதம், அதிரடி ஆக்கிரமிப்பு என்று பொருள் தரும்) போன்ற ஒரு கொடுஞ்செயலைச் செய்த சேவியர் இன்று அங்கீகரிக்கப்பட்ட புனிதர், ஆனால் இவர் பாதிரி வேடத்தில் வந்த கடற்கொள்ளையன் என்று சான்றளிக்கிறார் வரலாற்றாசிரியர் சீதாராம் கோயல். ஆனால் இன்றோ நாடெங்கிலும், குறிப்பாகக் குமரி மாவட்டத்தில், புனிதரான சேவியர் பெயரில் தேவாலயம் அமர்க்களப்படுகிறது.
”தமிழ்நாடு, தெற்கு கேரளம்,வடக்கு இலங்கை ஆகிய பகுதி மக்களின் நினைவுகளில்,வழிபாட்டில்,ஆன்மீ கத்தில்,பிரார்த்தனையில் நீக்கமற நிறைந்திருப்பதன் காரணமாக" தேவசகாயம் முக்தி பெற்றவராக அறிவிக்கப்படுகிறார். இந்த அறிவிப்பை உற்று நோக்கினால் ஒரு கேள்வி எழும். இவர் ஏன் கடற்கரை சார்ந்த மக்களை மையப்படுத்திப் புனிதராக்கப் படுகிறார்?
கடல் சூழந்த தீவுகளோ, தீபகற்பப் பகுதிகளோ கடற்கரைகளே முதலில் ஆக்கிரமிக்கப்பட்டு, அதிகாரம் ஸ்திரப்படுத்தப்பட்டு அதன் பிறகே நிலப்பகுதிக்குள் மெல்ல நுழையும் கிறிஸ்தவம் என்பது வரலாற்றை மேற்கத்தியக் கண்ணாடி அணியாது பார்த்தால் பளிச்செனத் தெரியும். கோவா, கோழிக்கோடு, கன்னியாகுமரி, தூத்துக்குடி இவையெல்லாம் வெகுசில உதாரணங்கள்.
அதே போல் புனிதர், தூதர் போன்ற விஷயங்கள் பாரம்பரிய இறைவழிபாட்டின் முக்கிய நாட்களை ஒட்டியே வருமாறு அமைக்கப்படும் என்பதும் வரலாறு. All saints Day என்று கொண்டாடப்படும் விழா பாகன் கலாச்சாரத்தில் வந்த ஒரு பித்ருக்கள் நினைவு தினம் போன்றது. மாயன் கலாச்சாரம் இருந்த இடம் தெரிகிறது. அதன் தடம் குறித்த வரலாற்று ஆய்வாளார்கள் ஆராய்கிறார்களாம்.
அதே போல் புனிதர், தூதர் போன்ற விஷயங்கள் பாரம்பரிய இறைவழிபாட்டின் முக்கிய நாட்களை ஒட்டியே வருமாறு அமைக்கப்படும் என்பதும் வரலாறு. All saints Day என்று கொண்டாடப்படும் விழா பாகன் கலாச்சாரத்தில் வந்த ஒரு பித்ருக்கள் நினைவு தினம் போன்றது. மாயன் கலாச்சாரம் இருந்த இடம் தெரிகிறது. அதன் தடம் குறித்த வரலாற்று ஆய்வாளார்கள் ஆராய்கிறார்களாம்.
இவர்களுக்குச் சாதகமாயிருப்போரும் பாரம்பரியத்தை ஏதேனும் ஒரு காரணம் சொல்லிப் பகடி செய்வதிலேயே குறியாக இருப்பார்கள். ஒரு உதாரணம் கருணாநிதியின் தைப் புத்தாண்டுப் பொய். இது வரலாற்றைத் திரிக்கும் வேலை என்று பலர் சான்று பகன்ற போதும் பலமுறை சொல்லப்படும் பொய் உண்மையாகும் என்ற கோயபல்ஸ் கோட்பாட்டில் மாறாப்பற்றுக் கொண்ட பகுத்தறிவுச் செம்மல் தம் ஜாதகத்தை நொந்தபடியே தான் சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறார்.
வலைப்பதிவர்கள் சிலரும் இது போன்ற பொய்ப் பிரச்சாரங்களுக்குத் துணைபோகின்றனர். தங்கள் பதிவுகளில் பதிந்த செய்திகளுக்கு ஆதாரம் கேட்டால் தங்கள் வலைத்தளத்திலேயே சில நாட்களுக்கு முன் பதிந்த பதிவைத் தருகின்றனர், முந்தைய பதிவு வேண்டாம் ஆதாரம் வேண்டும் என்றால் வாழ்வாதாரமே பறிபோனது போல் கூக்குரலிட்டுத் தம் எழுத்தார்வத்துக்கு முட்டுக்கட்டை போடுவதாக அரற்றுவர்.
அது இருக்கட்டும் ஒரு பக்கம். உண்மையைத் திரித்தால் அது பொய். தேவனின் பெயரால் நடக்கும் விஷயத்தில் பொய் கலப்பது குற்றம். ஆனால் தேவனின் பெயரால் தேவாலயங்கள் ஏன் இப்படித் திரிபை நம்பிச் செயலில் இறங்குகிறார்கள்? பகவத் கீதையில் இருந்து ஆங்காங்கே பத்திகளைச் சுட்டு ஒரு பாதிரியார் பைபிளுக்கு உரை போல எழுதி “இந்திய பைபிள்” என்று பெயர் சூட்டினார். ஏன் திருடுகிறீர்கள் என்று கேட்டால் பதில் வருவதில்லை. பிற்காலத்தில் பைபிளின் கருத்தே கீதையில் உள்ளது என்று புளுகுவதற்கு இன்றே அஸ்திவாரம் போடப்படுகிறது.
தன்னுடையது மட்டுமே நாகரிகம். தன்னைப்போல் நடை உடை பாவனை கொள்ளாதவர்கள் காட்டுமிராண்டிகள் என்ற மேட்டிமைத்தனம் இது. என்ன செய்தேனும் பிற கலாச்சாரங்களை அப்புறப்படுத்தி தம் கலாசாரத்தை (?!) நிலைநாட்டும் விஷ(ம) நரித்தனம் இது. அதுவே வரலாற்றைத் திரிக்கவும் பிறர் சரித்திரப் பதிவுகளை எரிக்கவும் தூண்டுகிறது. அன்பை போதிக்க இதுவா வழி என்று கேட்பவன் தீவிரவாதி என்கிறார்கள்.
600 ஆண்டுகளாய் முயன்று முழுதும் கிறிஸ்தவ மதத்துக்கு மாற்ற முடியாது தோற்றும், விடாது கருப்பெனத் தொடரும் இந்த நடவடிக்கைகளை விழிப்புடனிருந்து வேரறுக்க வேண்டும். வெளிப்பார்வைக்கும் மெய் போலவும், சற்றே உற்றுப் பார்த்தால் புதிராகவும் இருக்கும் இப்புனிதங்கள் ஆராய்ந்து பார்த்தால் அணுவைச் சத கூறிட்ட கோணளவும் உண்மையற்ற அரற்றல்கள் என்பது புரியும்.
இன்றைய அவசர உலகில் பலருக்கு ஆராய நேரமிருப்பதில்லை. சற்றே நேரம் ஒதுக்குவோம். பாரம்பரியம் காப்போம். பண்பாடு போற்றுவோம். தேசமுத்துமாரியின் தாள் பணிந்து தழைப்போம். வந்தே மாதரம். வந்தே மாதரம்.
1 comment:
நல்ல பதிவு மிக்க நன்றி
Post a Comment